மயிலாடுதுறை/தஞ்சாவூர், ஜன.4 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோயில் சம்பந்தம் மேல்நிலைப்பள்ளி யில் 15 முதல் 18 வயதுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை வகித்தார். பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கோட்டாட்சியர் பாலாஜி தொடங்கி வைத் தார். மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி ஆணையர் பாலு மற்றும் சுகா தார பணியாளர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாநகராட்சி, அரசர் மேல்நிலைப்பள்ளி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 15-18 வயதினருக் கான சிறப்பு கொரோனா தடுப் பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.