தஞ்சாவூர், டிச.02-- திமுக அரசு தேர்தல் வாக்குறு தியில் அறிவித்தபடி, நிபந்தனை யின்றி ஐந்து பவுனுக்கான நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பேரா வூரணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- தமிழக அரசு விதித் துள்ள புதிய நிபந்தனை காரண மாக 35 கிலோ அரிசி வாங்கிய வர்களுக்கும், 40 கிராமுக்கு மேல் அடகு வைத்தவர்களுக்கும் கடன் தள்ளுபடி இல்லை என்று கூட்டுறவு வங்கியில் கூறுகின்றனர், கடன் தள்ளுபடி பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. 40 கிராம் நகைக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேராவூரணி சட்டமன்ற என்.அசோக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.