districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்குக அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

தேனி, ஜூலை15-

      குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850  வழங்க வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தேனி மாவட்ட  7 ஆவது பேரவை வலியுறுத்தியுள்ளது.

     சங்கத்தின் தேனி மாவட்ட 7 ஆவது  பேரவை  மாவட்ட தலைவர் கே.துரை ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாவட்ட இணைச் செயலாளர் கே.கந்த சாமி வரவேற்று பேசினார் .வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஏ.பி.முருகேசன், வரவு செலவு அறிக்  கையை எஸ்.சிவமணி ஆகியோர் சமர்ப்பித்தனர். மாநில பொருளாளர் என்.ஜெயசந்திரன் தொடக்க உரை யாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர்  சி.ஜெயபாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெ.பேயத்தேவன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்  சங்க முன்னாள் மாநில தலைவர் எம். பொன்னையா, ஓய்வூதியர் கூட்ட மைப்பு மாவட்ட தலைவர் சி.பா.ஆண்ட வர், மின்வாரிய ஓய்வு மாநில தலைவர் சந்திரசேகரன், போக்குவரத்து ஓய்வு மண்டல துணைப்பொது செயலாளர் எம்.பாலையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் நிறைவு செய்து பேசினார்.