மயிலாடுதுறை மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யப்படும் காய்கறி அங்காடியை மாவட்ட ஆட்சியர் செவ்வாயன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), ராஜகுமார் (மயிலாடுதுறை), வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஜெ.சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்