மயிலாடுதுறை, பிப்.13- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் மார்ச் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் தெரிவித்தார். மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை கால் நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செய லாளர் கார்த்திக் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க வும், துறைமுகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், கட்டுமானப் பணிகளை தரமாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மார்ச் மாதத்தில் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆய்வின் போது மீன்வளத்துறை இணை இயக்கு நர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜூவ், தரங் கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உடனிருந்தனர்.