districts

img

உத்திரங்குடி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’’ மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, செப். 4-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், உத்திரங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இத்திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.  மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறலாம்.  அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் உத்திரங்குடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, திட்ட அரங்குகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இதுவரை பெற்ற மனுக்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முறைகளை விரிவாக கேட்டறிந்தார்.  முகாமில், முதலமைச்சர் காப்பீட்டு அட்டை கோரி மனு அளித்தவர்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு. மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.