districts

 தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த்துறை அலகில் வட்டாட்சியர்கள் மாற்றம்

தஞ்சாவூர், மே 17-

   தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் மூன்று பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப் பட்டவர்கள்  விவரம் வருமாறு:-தஞ்சாவூர் ஆட்சியர் அலு வலகத்தில் உ பிரிவில் தலைமை உதவியாளராக இருந்த  பூவந்திநாதன், வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று  கும்பகோணத்தில் உள்ள சென்னை- கன்னியாகுமரி தொழிதடச்சாலைகள் திட்ட தனி வட்டாட்சியராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். கும்பகோணத்தில் தேசிய  நெடுஞ்சாலை 45 கி அலகில் தனி வட்டாட்சியராக இருந்த அழகேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு  பணியாற்றிய வட்டாட்சியராக ராமலிங்கம் மாறுதல் செய்  யப்பட்டு  மாவட்ட ஆய்வுக்குழு அலுவலகத்தில் துணை ஆய்வுக்குழு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு  பணியாற்றி வந்த தமிழ்ஜெயந்தி ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடம் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் பிறப்பித்துள்ளார்.