தஞ்சாவூர், ஜூலை 8-
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்ய அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாவட்ட அறங்காவ லர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பட்டீஸ்வரம் எஸ்.கே.ஆர். பாலசுப்பிரமணியன், உறுப்பினர் களாக திருவையாறு கோ.அரசாபகரன், திப்பியக்குடி சு.சம்பத் என்கிற சேதுராமன், ஆவிக்கோட்டை சி.சுப்பை யன், கீழகஞ்சிமேடு செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் தஞ்சாவூர் அறநிலையத் துறை இணை ஆணை யர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், திருவை யாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை யில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்று கொண்ட னர்.