districts

சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

திருவாரூர், மே 19-  

    மயிலாடுதுறையில் இருந்து எரவாஞ்சேரி, பிலாவடி வழியாக குடவாசல் வந்த பேருந்து எண்-457 நிறுத்தப்பட்டது. எனவே பேருந்தை  மீண்டும் இயக்க வலியுறுத்தி மே 19 அன்று பிலாவடி கடைவீதியில் குட வாசல் சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

   போராட்ட அறிவிப்பை அடுத்து குடவாசல் வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் தி.குருநாதன், திருவாரூர், நன்னிலம் பேருந்து பணி மனை  கிளை மேலாளர்கள் தலைலையில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எம்.கோபிநாத், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.ஜெகதீஸ்வரி ஆகியோர் முன்னி லையில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தையில் நடைபெற்றது.  

   இதில், ஏற்கனவே மயிலாடுதுறையில் இருந்து குடவாசலுக்கு இயக்கப்பட்ட பேருந்து எண்-457 மீண்டும் இரண்டு மாத காலங்களில் இயக்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதை யடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.  

  பேச்சுவார்த்தையின் போது சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் டி. அந்தோணி, பிலாவடி கிளை செயலாளர்கள் பி.குமரேசன், ஜி.ஹரி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.