districts

img

தரங்கம்பாடியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.4 - திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா நோய் தொற்று காலத்திலும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர்.  இந்நிலையில் கடந்த நவ. 16 முதல் 28 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களது குடும்பம் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ளது. எனவே இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்க கோரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி டி.ஆர்.இ.யு மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா, கோட்ட தலைவர் கரிகாலன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், துணைத் தலைவர் மாறன் ஆகியோர் பேசினர்.