districts

img

தமுஎகச கலை இலக்கிய இரவு

திருத்துறைப்பூண்டி, ஜூலை 8 -

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய  இரவு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை  புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் க.மாரிமுத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மாநில துணை பொதுச் செயலா ளர் களப்பிரன், மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை  ஆற்றினர். இதில் தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இறுதியில் எழுத்தாளர் ஐ.வி.நாக ராஜன் எழுதிய ‘புரட்சியாளர் சேகுவேரா’ என்ற நூல் வெளியிடப்பட்டது.