districts

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தாள் கட்டாயம்

தஞ்சாவூர், டிச.12- பேராவூரணி, சுறவம் (தை) முதல் நாளை, தமிழ் புத்தாண்டு நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தஞ்சை குணசேகரன், கொத்தமங்கலம் உதயகுமார், திராவிடர் கழக பொறுப்பாளர் மு.தமிழ்ச்செல்வன், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொறுப்பாளர் வேலுச்சாமி, முனைவர் ச.கணேஷ்குமார், செங்கை நிலவன், அறநெறி மக்கள் கட்சி த.ஜேம்ஸ், பேராசிரியர் சண்முகப்பிரியா ஆகியோர் அறிவியல் வழியிலும், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும், தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் ஆளுமைகளின் மிகப்பழமையான கோரிக்கையான சுறவம் (தை) முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாளாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.

மாவட்டச் செயலாளர் த.பழனி வேல் வரவேற்றார். மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் நன்றி கூறினார்.  சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கள், கன்னி, துலை, நளி, சிலை என்ற வழக்கொழிந்த  தமிழ் மாதப் பெயர்களை பள்ளிப் பாடங்களில் சேர்த்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு முன்வர வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழ்வழியில் கல்வியை தமிழ்நாடு அரசே வழங்க வேண்டும். ஒன்றிய அர சால் பறிக்கப்பட்ட கல்வி உரிமை யை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மீட்க வேண்டும்.தமிழ் வழியில் படித்த வர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தாள் கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. நிகழ்வில் ரெட்டவயல் இரா. மாரிமுத்து, இந்திரா நகர் செ. சிவக்குமார், பாரதி ந.அமரேந்தி ரன், கெ.ஜெயபால், கள்ளங்காடு சதீஷ்கரன், ஆத்தாளூர் ராஜ்குமார், மருத உதயகுமார் உள்ளிட்ட தமிழ்வழிக் கல்வி இயக்கம் மற்றும் தமிழ்வழிக்கல்வியை ஆத ரிக்கும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

;