தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.ஏ.எம்.ஜோதிமுருகன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.சிவகாமசுந்தரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தாந்தோணி ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.