கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல் புதனன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.