புதுக்கோட்டை, டிச.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழுக்கு 184 சந்தாக்களும், செம்மலர் இலக்கிய மாத இதழுக்கு 65 சந்தாக்களும் ஒப்படைக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சிறப்புப் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை புதுக்கோட் டையில் நடைபெற்றது. பேர வைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரன் அர சியல் விளக்க உரையாற்றி னார். அவரிடம் மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழுக்கு 184 ஆண்டு சந்தாக்களும், செம்மலர் இலக்கிய மாத இதழுக்கு 65 ஆண்டு சந்தாக் களுக்கான தொகை ரூ. 46,990 ஒப்படைக்கப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வக் கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எம். சின்னதுரை கட்சியின் வெகு ஜன வசூல் இயக்கம் குறித்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பலர் பங்கேற் றனர்.