தஞ்சாவூர், டிச.4 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தெலுங் கன் குடிக்காடு, தொண்டராம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் சார்பாக ரூ.4 லட்சம் மதிப்பி லான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங் கப்பட்டன. ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் வெற்றி வேந்தன் மற்றும் தெலுங் கன்குடிக்காடு, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் ஆகியோரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொதுமக்கள் உபயோகத்திற்காக தஞ்சாவூர் மாவட்ட ரெட்கிராஸ் சார்பில் வழங்கப்பட்டன. மேலும், பொது மக்கள் பயன்பாட்டிற்காக இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளதாகவும், பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஒரத்தநாடு துணை கிளை செயலாளர் சுரேந்திரனை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ரெட் கிராஸ் சொ சைட்டி சார்பாக செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.