districts

img

தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா அரசு தலைமை கொறடா வழங்கல்

கும்பகோணம், ஜூலை 3-

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிடை மருதூர் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவி ரமாக நடைபெற்று வரு கிறது.

    இதனொரு பகுதியாக,  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் சந்தா சேர்ப்பு நடை பெற்றது. இதில், திருவிடை மருதூர் சட்டமன்ற உறுப்பி னரும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் தீக்கதிர்  நாளிதழுக்கு ஒரு வருடத்திற் கான சந்தா ரூ.2000-ஐ  வழங்கினார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி, பக்கிரிசாமி, சேகர் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

   இந்நிகழ்வில் சிபிஎம் கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ கோபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.