வழிகாட்டுதல் களப்பயணம்
பொன்னமராவதி, ஜன.31 - புதுக்கோட்டை மாவட் டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் பொன் னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட எட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர் கள் 289 பேருக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப் பயணம் நடைபெற்றது. இவர்கள் கணேசர் கலை அறிவி யல் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர். கல்லூரி முதல்வர் பழனியப்பர் தலைமை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மலைச்சாமி மற்றும் வட் டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) சிவக் குமார் முன்னிலை வகித்த னர்.
மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு
கும்பகோணம், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செண்பகக் கொல்லை கிராமம் மேலத் தெருவில் வசிப்பவர் அஞ்சையன் மனைவி இந்திராணி (62). இவர், வயது முதிர்ந்த தனது கணவருடன் வசித்து வரு கிறார். இந்நிலையில் செவ் வாயன்று நள்ளிரவில் இயற்கை உபாதைகளை கழிக்க மூதாட்டி கொல் லைப் புறத்திற்கு சென்ற போது, அங்கு மறைந் திருந்த முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென, மூதாட்டி இந்திராணியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல்துறை சிறப்பு பிரிவினர் தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அரசு அலுவலகங்களில் ஆய்வு
அரியலூர், ஜன.31 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் ‘உங்க ளைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங் கொண்டம் துணை கண் காணிப்பாளர் அலுவல கம், அரசு தொடக்கப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ் செயல் படும் அலுவலகங்களில் செயல்பாடு, அடிப்படை கட்டமைப்பு குறித்து மாவட்ட ஆய்வு மேற் கொண்டார். மேலும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மாண வர்களின் வாசிப்பு திறனை ஆய்வு செய்தார். இதில் சிறந்த வாசிப்பு திறனு டைய மாணவருக்கு பரிசு கள் வழங்கி பாராட்டி னார்.
குரூப் 4 தேர்வுக்கு பிப்.4 முதல் பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி திருவள்ளுவர் கல்விக் கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் சார்பில் குரூப் 4 போட்டித் தேர்வுக் கான பயிற்சி வகுப்புகள் பிப்.4 (ஞாயிறு) அன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங் கிணைந்த குரூப் 4 பணியிடங் களுக்கான தேர்வு ஜூன் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பேரா வூரணி நகர வர்த்தகர் கழக கட்டிடத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி நடைபெற உள்ளது. பேராவூரணி அரசு கல்லூரி முதல்வர் முனைவர் திரு மலைச்சாமி பயிற்சியை துவக்கி வைக்கிறார். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற அரசு அதிகாரிகள் பயிற்சி வழங்குகிறார்கள். சேர்க் கைக்கு திருவள்ளுவர் கல்விக் கழக பொறுப்பாளர்களை 98426 09980, 6381618018 என்ற எண் களில் தொடர்பு கொள்ளலாம்.
போதைப்பொருள் ஒழிப்பு, வாக்காளர் தின விழிப்புணர்வு
தஞ்சாவூர், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் தொடங்கிய பேரணிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.திருமலைச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி பேரூராட்சித் தலைவர் சாந்திசேகர் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பேருந்து நிலையம், முதன்மைச் சாலை, சேது சாலை வழியாக வட்டாட்சியர் அலுவல கத்தில் நிறைவடைந்தது. காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர் சிறப்புரையாற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாயனூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை
கரூர், ஜன.31 - கரூர் மாவட்டம் மாயனூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டக் குழு சார்பில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிர மணியன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அம்மனுவில், “கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதி மக்களுக்காக செயல்பட்டு வரு கிற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் கிருஷ்ணராயபுரத்தில் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாயனூர் பகுதியில் தமிழக அரசிற்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தின் சர்வே எண். 179, 183, 186, பட்டா எண்.1396. இந்த அரசு நிலத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்திற்கு அரசு நிர்வாகத்தில் சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
‘முன்மாதிரி விருது’ பெற திருநங்கையர் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜன.31 - தமிழக அரசு திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி சிறப்பு விருதான ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்று வழங்கி வருகிறது. அதற்கு திருநங்கைகள் அவர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய முயற்சியில் படித்து தனித்திறமை பெற்று, பல்வேறு துறைகளில் முன் னேறியவர்களுக்கு இந்த முன்மாதிரி விருது வழங்கப் பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்விரு தினை பெறுவதற்கு தகுதியுடைய திருநங்கைகள் awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 15.2. 2024-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்.04322- 222270-ஐ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி
கும்பகோணம், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜர் ஆரா தனை விழாவை முன்னிட்டு ஜனவரி 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடு முறை அறிவித்திருந்தது. இந்த விடுமுறை தினத்தில் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையில் 3 ஆம் ஆண்டு பயிலும் 11 மாணவர்கள், தன்னிச்சையாக ஜன.30 அன்று காரைக்கால் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றனர். மாணவர்கள் கடலில் குளித்தபோது, திடீரென வந்த ராட்சத அலை மாணவி ஹேமமாலினியை இழுத்துச் சென்றது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் அபிலாஷ், ஜெகதீஸ்வரன், புகழேந்தி ஆகிய மூவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. கடலில் மூழ்கிய நான்கு பேரில், ஹேமாமாலினி, ஜெகதீஸ்வரன் ஆகிய இருவர் இறந்த நிலையில் அவர்களின் உடல் மீட்கப் பட்டது. அபிலாஷ் என்ற மாணவரை தேடும் பணி நீடித்தது. மாணவர் புகழேந்தி மயங்கிய நிலையில் காப் பாற்றப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குப்பை எரிக்கும்போது மருந்து பாட்டில் வெடித்து முதியவர் உயிரிழப்பு
தஞ்சாவூர், ஜன.31- தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை வங்கி ஊழியர் காலனி 9 ஆவது தெருவைச் சேர்ந்தவர் எம். துரைமாணிக் கம் (60). இவர் போகி பண்டிகையையொட்டி, வீட்டில் இருந்த பழைய பொருள்களை வீட்டு அருகே வைத்து ஜன. 12 அன்று எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிலிருந்த மருந்து பாட்டில் வெடித்து சிதறி, துரைமாணிக்கம் மீது விழுந்தது. இதனால், பலத்த காயமடைந்த துரைமாணிக்கம் தஞ்சாவூரிலுள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் திருச்சி யிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த துரைமாணிக்கம் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் பெறலாம்
புதுக்கோட்டை, ஜன.31 - வேளாண்மைத் துறை சார்பில் குறைந்த வாடகையில் நெல் அறு வடை இயந்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ள தாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறு வடை பணிகள் துவங்கப்பட்டு நடை பெற்று வருகின்றன. புதுக் கோட்டை மற்றும் இதர மாவட்டங்க ளில் இருந்து வரப்பெற்றுள்ள நெல் அறுவடை இயந்திரங்கள் பயன் பாட்டில் உள்ளன. அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் நெல் அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. தனியார் அறுவடை இயந்திரங் களுக்கான வாடகையை முறைப் படுத்தப்பட வேண்டும் என்று விவ சாயிகளால் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, முத்தரப்பு குழுக் கூட்டம் நடத்தி விவாதித்து பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக் கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500 மற்றும் டயர் வகை இயந்தி ரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,740 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடகைத் தொகையை விட கூடு தலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்யப்படுவதாக புகார் ஏதும் பெறப்பட்டால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் உழவன் செயலியில் தனி யார் அறுவடை இயந்திரங்கள் தொழில் முனைவோர் தொலைபேசி எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. நெல் அறுவடை இயந்திரங்கள், செயின் டைப் அறுவடை இயந்தி ரங்களை வேளாண்மைப் பொறியி யல் துறை மூலம் வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 என்ற வீதத் தில் விவசாயிகள் பெற்று பயன்பெற லாம். மேலும் விபரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை 04322-221816, 94434 05997, 94894 40970 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை
அரியலூர், ஜன.31- அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் செவ்வா யன்று நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், “அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை யினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து ஏற்ப டுத்தப்பட்டு வருகின்றன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவைப்படும் கூடுதலான கட்டடங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவ மனைகளுக்கு அதிகளவு மக்கள் வரு கின்றனர். அதனைக் கருத்தில்கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும், சுகாதார துறைக்கும் அதிக ஓதுக்கீடு ஏற்படுத்தி தருமாறு அரசு உறுதி மொழிக் குழு ஆய்வின் போது எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே வரும் காலங்களில் படிப்படி யாக நிதியினைப் பெற்று சுகாதாரத் துறை யின் தேவைகள் நிறைவேற்றப்படும்” என்றார். கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண் டம் க.சொ.க.கண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியை வறட்சி மாவட்டமாக அறிவித்து கடன் தள்ளுபடி, நிவாரணம் வழங்குக!
ஆட்சியரிடம் மனு திருச்சிராப்பள்ளி, ஜன.31 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சியை வறட்சி மாவட்டமாக அறி வித்து, கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணங் களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும். மணிகண்டம், அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு 4 மாதத்திற்கு மேல் வழங்காமல் உள்ள சம்பளப் பாக்கியை வழங்கி நூறு நாட்களுக்கு முழுமையாக வேலை வழங்குவதுடன் அரசு அறிவித்த சம்பளத்தை வழங்க வேண்டும். திருச்சி-தஞ்சை சாலையில் உள்ள காட்டூர், திருவெறும்பூர் தாலுகா அலுவல கம் ஆகிய இடங்களில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவாதம் செய்வதுடன், பேருந்து நிறுத்த விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். கடந்த கால கூட்டங்களில் இந்த மன்றத்தில் அரசு அதிகாரிகளால் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட திரு வெறும்பூர் கிளிவாய்க்கால் ஆக்கிரமிப்பு களை அகற்றியும் தூர்வாரும் பணிகள் நடை பெறவில்லை. திருவெறும்பூர் - நவல்பட்டு சாலையில் உள்ள சொர்குழுமி சீரமைக்கும் பணியும் நடைபெறவில்லை. திருவெறும்பூர் மலைக் கோவில் தெற்கு மாரியம்மன் கோவில் அங்கன்வாடி கட்ட ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. ஆறு மாதமாகியும் அதற்கான பணி கள் நடைபெறவில்லை. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.