districts

img

மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் தஞ்சை புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அறிவுரை

தஞ்சாவூர், ஜூலை 14-

      தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது  நூலக இயக்கம் சார்பில், புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை  தொ டங்கியது.

     இத்திருவிழாவைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசுகையில், “சென்னையில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்த கத் திருவிழா நடத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, தஞ்சா வூரில் தொடங்கப்பட்டுள்ள இத்திருவிழாவில் மொத்தம்  110 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள புத்தகங் களை வாங்கி வாசிப்பு பழக்கத்தை  இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இத்திருவிழா நடத்தப்படுகிறது.  மாணவப் பருவத்தில் படிப்பவை, வயதான காலத்தி லும் மறக்காமல் நினைவில் இருக்கும். எனவே, மாணவ-மாணவிகள் புத்தக வாசிப்பு பழக்கத்தை இப்போதே தொடங்க வேண்டும். ஏராளமான  அறிஞர்கள் எழுதிய நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.

    இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடை பெற்ற தொடக்க விழாவில், தமிழக அரசின் தலைமை கொறடா  கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேக ரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

   இத்திருவிழா  ஜூலை 24 அன்று வரை நாள்தோறும் காலை  10 மணி முதல் இரவு 9 மணி வரை  நடைபெறவுள்ளது.  இதில், பாரதி புத்தகாலயம், காலச்சுவடு, கிழக்கு, என்.சி.பி.எச்., எதிர், தினமணி, விகடன், நக்கீரன்,  தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்ப் பல் கலைக்கழகம், சரசுவதி மகால்  நூலகம் உள்ளிட்ட நிறுவனங்கள்  சார்பில் ஏறத்தாழ 110 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதன் அருகில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் பெயரில் பாரம் பரிய உணவு வகைகள் கொண்ட  உணவுத் திருவிழாவும் தொடங்கப் பட்டுள்ளது.

    மேலும், நாள்தோறும் காலை  10.30 மணிக்கு இலக்கிய அரங்கம், 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி கள், மாலை 4.30 மணிக்கு பள்ளி  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 5 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 5.30 மணிக்கு கிராமி யக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி கள் ஆகியவை நடைபெற வுள்ளன. இவை தவிர, நாள்தோ றும் மாலை 6.30 மணிக்கு சொற் பொழிவாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் நகைச் சுவை  சிந்தனை அரங்கம் நடை பெறுகிறது.