districts

‘ஜெய்ஸ்ரீராம்’ கூறச் சொல்லிய பள்ளி நிர்வாகம்

திருவாரூர், ஜன.23 -  திருவாரூர் நகராட்சிப் பகுதியில் அமைந் துள்ள அரசு உதவிபெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டாயப்படுத்திய நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகராட்சி அருகே அமைந் துள்ள அரசு உதவிபெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்து,  முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து சமூக  மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் திங்களன்று காலை பள்ளியில் வழக்கம்போல் இறைவணக்கம் நடைபெற்றது. அப்போது, அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜெய்ஸ்ரீராம் என மூன்று  முறை கூற வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி, அனைத்து மாணவிகளையும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வைத்துள்ளது. மாணவிகள் மாலை வீடு திரும்பிய பின்,  பெற்றோர்களிடம் பள்ளியில் நடந்த சம்ப வத்தை தெரிவித்துள்ளனர்.  இதனடிப்படையில், மாணவர்களை கட்டாயமாக ஜெய் ஸ்ரீராம் சொல்ல வலியு றுத்திய பள்ளி நிர்வாகத்தை கண்டித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சியரும் பள்ளி நிர்வாகத்தின் மீது  உரிய நடவடிக்கை வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்படும் இப் பள்ளியை, அரசுப் பள்ளியாக செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாயன்று ஜிஆர்எம்  பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாணவர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ப.சுர்ஜித் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் பா.ஆனந்த் கண்டன உரையாற் றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்  தலைவர் வீ.சந்தோஷ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.