districts

img

லண்டனிலுள்ள சீகன்பால்கு அச்சடித்த பைபிளை தரங்கம்பாடி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்

மயிலாடுதுறை, ஜூலை 10-

       மயிலாடுதுறை மாவட்டம் தரங்  கம்பாடியில் சீகன்பால்கு தரங்கம்  பாடி வந்த 317 ஆவது தினத்தை யொட்டி 2 மணி நேரத்தில் 1200க்கும் மேற்பட்டோர் பைபிளை கையால் எழுதும் சாதனை நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை நடைபெற்றது.

    சீகன்பால்கு ஆன்மீக மன்றம், வேதாகம நண்பன் அமைப்பு இணைந்து “கையெழுத்து வேதாகம சாதனை” என்னும் தலைப்பில் நடை பெற்றது. இதில், 1200-க்கும் மேற் பட்டோர் பங்கேற்று 1464 பக்கங்கள் உள்ள வேதாகமத்தை கையால் எழுதி னர். இந்நிகழ்ச்சியை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் முனைவர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.  

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தரங்கம்பாடிக்கு 300  ஆண்டுகளுக்கு முன்பு வந்து தொண்டு கள் ஆற்றிய சீகன்பால்கு, ஜெர்மன் மொழியிலிருந்த பைபிளை முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்து எழுதினார்.  

   தரங்கம்பாடியில் சீகன்பால்கு வுக்கு மணிமண்டபம் அமைக்கப்  படும் என தேர்தல் அறிக்கையில்  சொல்லப்பட்டது. சட்டப்பேரவையி லும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள் ளது. எனவே தமிழ்நாடு அரசு மணி மண்டபம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மயிலாடுதுறை-தரங்  கம்பாடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சீகன்பால்கு தமிழில் பெயர்த்து கையால் எழுதிய வேதாகம பிரதி, தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் இருந்து காணாமல் போனது. இந்நிலையில், லண்டனில் உள்ள கிங்ஸ் அருங்காட்சி யகத்தில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு சிலைகள் கண்டறியப்பட்ட போது, சீகன்பால்கு எழுதிய வேதாகம பிரதி ஒன்றும் இருப்பது தெரிய வந் தது. இது தஞ்சாவூர் சரஸ்வதி மகா லில் இருந்து சென்றுள்ளது என்பது கண்டறியப்பட்ட நிலையில், அதனை இந்தியாவுக்கு கொண்டுவர யுனெஸ்கோ மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத னைக் கொண்டு வந்தால், தரங்கம்பாடி யில் சீகன்பால்கு வாழ்ந்த வீட்டில்  அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சி யகத்தில் அந்த பிரதியை வைக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

    இச்சந்திப்பின் போது புதிய எருச லேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ்,  த.பே.மா.லு  கல்லூரி முதல்வர் ஜான்  சன் ஜெயக்குமார், பிஷப் ஜான்சன்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன் ஆகியோர் உடனிருந்த னர்.