districts

img

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு மாநில எழுத்தறிவு விருது

சீர்காழி, டிச.5 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த சேத்திருப்பு கிராமத்தில் உள்ள நடு நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி யாற்றி வரும் பாலு என்பவர் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் நடத்தும், ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத் தில் சிறப்பாக பணியாற்றினார். இதற்காக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட  அளவில் சிறந்தவராக தேர்வு செய்யப்பட்டு,  மாநில எழுத்தறிவு விருது பெற்றுள்ளார். திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்ற விழாவில் தலை மையாசிரியர் பாலு, ‘மாநில எழுத்தறிவு விருதை’ பெற்றார்.  விருது பெற்ற தலைமையாசிரியர் பாலுவை கொள்ளிடம் வட்டார கல்வி அலுவ லர்கள் செல்வம், பாலு, அனைத்து பள்ளி களின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,  பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

;