districts

திருச்சி முக்கிய செய்திகள்

நிர்மல் பள்ளிக்கு நிதி  வழங்கிய வங்கி ஊழியர் 

கரூர், ஜூன் 2 - கரூர் வைசியா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்  செயலாளர் வெங்கடேசன் 39 ஆண்டுகளாக கரூர் வைசியா  வங்கி ஊழியர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில்  பணி யாற்றியவர்.  ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களுக்கு எதிராக, வங்கி ஊழியர்களை ஒன்று திரட்டிய தில் முக்கிய பங்காற்றியவர். கரூர் மாவட்டத்தில் அனைத்து ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களில் முக்கிய பங்காற்றியவர். கரூர் வைசியா வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பாக, கரூர்  அழகம்மை மஹாலில் இவருக்கு பணி நிறைவு பாராட்டு  விழா நடைபெற்றது.  பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்கள், சிஐடியு சங்கம் சார்பாக எம்.சுப்பிரமணியன், ஏஐடியுசி வடி வேலன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் நிர்மல் பள்ளி நிதியாக வெங்க டேசன் குடும்பத்தின் சார்பில் ரூ.5000 வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழர் முகாம் இளைஞரைக் காணவில்லை எஸ்.பி.யிடம் தாய் புகார்

புதுக்கோட்டை, ஜூன் 2 - இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த இளைஞர், சென்னையில் திருமணம் ஒன்றுக்கு சென்ற  பிறகு காணவில்லை என அவரது தாய், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தோப்புக் கொல்லை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த குலேந்திரன் மனைவி கே.பவானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனது மகன் சசிகரன் (26), பெயிண்டிங் தொழி லுக்காக சென்னையில் நண்பர்களுடன் அறை எடுத்து  தங்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திரும ணத்துக்கு உறவினர்களுடன் சென்றிருந்தார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து  மே 1 ஆம் தேதியே சென்னையில் காவல்துறையில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. இப்போது, 38 நாட்கள் நிறைவடைந் தும் சசிகரன் குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனவே,  எனது மகனைக் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்க  வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி

பாபநாசம், ஜூன் 2 - உலக புகையிலை எதிர்ப்புத் தின விழிப்புணர்வுக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த  கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் நடந்தது. இக்கூட்டத்தில் கபிஸ்தலம்  வட்டார மருத்துவ அலுவலர் தீபக், புகையிலையால் ஏற்ப டும் பாதிப்பு குறித்து பேசினார். பின்னர், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வட்டார சுகா தார மேற்பார்வையாளர் கணேசன், மருத்துவர்கள் ஜெகன் நாத், ஸ்வர்ணலதா, சுகாதார ஆய்வாளர்கள் அஸ்வின்,  சாரதி, சர்க்கரை ஆலை ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

பாபநாசம், ஜூன் 2- பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று  வருகின்றன. இங்குள்ள காவல்துறை நிழற்குடை அருகே  சாலை இரண்டாகப் பிரிகிறது. தஞ்சாவூரிலிருந்து கும்ப கோணம் நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள், எந்தப் பக்கம் செல்வது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு  சாலை சாலியமங்கலம் நோக்கிச் செல்கிறது. இந்தச் சாலை வழியே திருக்கருக்காவூர், மெலட்டூர், திட்டை, தஞ்சாவூர் செல்லலாம்.  இதேப் போன்று கும்பகோணத்திலிருந்து திருக்க ருக்காவூர், மெலட்டூர் சென்று வரும் வாகன ஓட்டிகள், எந்த  வழியில் செல்வது எனத் தெரியாமல் அருகில் விசாரித்து  செல்கின்றனர்.  எனவே காவல் நிழற்குடை அருகே வழி காட்டி பலகை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார்: தீக்குளிக்க முயன்ற வாலிபர்

அரியலூர், ஜூன் 2 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சின்ன வளையம் பைபாஸ் பாலத்தின் கீழ் பகுதியில் ஜெயங் கொண்டம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவரிடம் வாகனத்தை பிடித்து ஆவணங்களை கேட்டுள்ளனர்.  அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால்  மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள் ளனர். மேலும் அவர் நிறைந்த குடிபோதையில் இருந்த தால், ஆவணத்தை கொண்டு வந்து காண்பித்து விட்டு  வாகனத்தை எடுத்துச் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதில் அந்த வாலிபர், போலீசாரிடம் மோட்டார் சைக் கிளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையல், அந்த வாலிபர் ஜெயங் கொண்டம் நால்ரோடு பகுதிக்கு வந்து பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு திடீரென தீக்குளிக்க  முயற்சித்தார்.  அப்போது அருகில் இருந்தவர்களும், போக்கு வரத்து போலீசாரும், உடனே அவர் கையில் வைத்திருந்த  பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத் திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அவர் பூவானிப்பட்டு கிராமம் சிறுவடித்  தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பது தெரிந் தது. போலீசார், அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து,  உரிய ஆவணத்துடன் வந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

கல்லூரிக்கு எதிரில் கழிவறை கட்டுவதா?
இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 2- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்  பல்வேறு பகுதிகளில் வண்ண விளக்கு களுடன் பூங்கா அமைத்து வருகிறது.  இதைத் தொடர்ந்து திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில், மாநகராட்சி நிர்வாகம் நடைபாதை யில் பூங்கா அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு  வருகிறது. மேலும், அப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகளுக்கும் திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  கழிப்பிடம் அமைப்பதற்கு சுற்றிலும் பல்வேறு இடங்கள் இருக்கும் பட்சத்தில், கழி வறை கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு எதிரே இடத்தை  தேர்வு செய்தவன் காரணம் என்ன? தமிழக  முழுவதும் பல்வேறு மாநகராட்சி கழிவறை கள் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.  கல்லூரிக்கு எதிரில் இதுபோல கழிவறை களை அமைப்பது, கல்லூரியின் இயல்பு  நிலையை பாதிக்கும். கல்லூரி மாணவர் களுக்கு நோய் பரவக் கூடிய நிலை ஏற்ப டும். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடன டியாக இதில் தலையிட்டு, தந்தை பெரியார்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் அமைக்க உள்ள கழிவறையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.  மாநகராட்சி நிர்வாகம் மறுக்கும் பட்சத் தில் இந்திய மாணவர் சங்கம் மாணவர் களை திரட்டி போராட்டம் நடத்தும் என இந்திய  மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஜி. கே.மோகன், மாவட்டத் தலைவர் சூரியா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் வரத்து குறைவு  மூன்று மடங்கு விலை  உயர்ந்த வாழைக்காய் 

திண்டுக்கல், ஜுன் 2-  திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சூறா வளிக்காற்றின் காரணமாக வாழை தோட்டங்களில் சேதம்  ஏற்பட்டது.இதனால் சிறுமலை செட் வாழை சந்தைக்கு வரவேண்டிய வாழைக்காய் வரத்து குறைந்ததால் விலை  கிடுகிடுவென 3 மடங்கு உயர்ந்து விற்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலை சந்தையில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாழைத்தார்களுக்கு என தனி சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள சிறுமலை, வெள்ளோடு, ஆத்தூர், வத்தல குண்டு, சின்னாளபட்டி ,நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதி களில் விளையக்கூடிய செவ்வாழை, நாட்டு வாழைக்காய்,  பூவன் ,கற்பூரவல்லி, சிறுமலை வாழை என அனைத்து ரக வாழைத்தார்களை விவசாயிகள் இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு வரக்கூடிய வாழைத்தார்களை ஏல முறையில் வியாபாரிகள் விற்ப னைக்கு வாங்கிச்செல்வது வழக்கம். தற்பொழுது வீசிய சூறாவளி காற்றால் பயிரிடப்பட்டி ருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.. இதனால் இந்தச்  சந்தைக்கு சுமார் 7000 வாழைத்தார்கள் வரக்கூடிய இடத்தில் 2000 வாழைத்தார்களே வந்தன. சென்ற வாரம்  வரை விற்பனையான வாழைத்தார்கள் இரு மடங்கு விலை உயர்ந்து 500 ரூபாய்க்கு விற்கக்கூடிய செவ்வாழை  1500 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய  கற்பூரவள்ளி 700 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கக்கூடிய நாட்டு வாழைக்காய் 600 ரூபாய்க்கும் 150 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனையாக கூடிய பூவங்காய் 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரைக்கும் அனைத்து வாழைத்தார்களும் வரத்து குறைவால் இரு மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி உள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது

ஒட்டன்சத்திரம், ஜூன் 2- ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் நான்கு  வழிச்சாலையில் நூல் பேரல் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது. தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூருக்கு தனியார் நுட்பாலைக்கு நூல் பேரல் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை, தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜீ(வயது 40)  என்பவர் ஓட்டி வந்தார். ஜூன் 1 அன்று காலை ஒட்டன்சத்திரம்- தாராபுரம்  நான்கு வழிச்சாலையில் கள்ளிமந்தையம் செல்வதற்காக  மூலனூர் செல்லும் சாலையின் எதிரே ஓட்டுநர் கண்டெய்னர் லாரியை திருப்ப முயன்றார்.அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி நடு சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜீ காயமின்றி  உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்து.

பாம்பு கடித்து மூதாட்டி பலி

தேனி, ஜூன் 2- பாளையம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலியா னது குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், பாளையம் அருகே அணைப்பட்டி பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்தவர் சுருளி வேல் மனைவி மயில்தாய் என்ற அன்னமயில் (75).இவர்  வீட்டில் இருந்தபோது கால் விரலில் பாம்பு கடித்துள்ளது .அருகில் உள்ளவர்கள் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் .அங்கு  முதலுதவி சிகிச்சைக்கு பின் கம்பம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். பரிசோதித்த மருத்துவர், மூதாட்டி இறந்து விட்டதாக  தெரிவித்தார். இது குறித்து இறந்த மூதாட்டி மகள்  முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து  பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி, ஜூன் 2-  முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 200 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் தொடங்கி பழனி செட்டிப்பட்டி வரை, 14 ஆயி ரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் முல்லைப்பெரியாறு அணை யின் பாசனத்தின் மூலம் இரு  போக நெல் விவசாயம் நடை பெற்று வருகிறது. முல்லை  பெரியாற்று நீரை நம்பி யிருக்கும் இவ் விளை நிலங் களுக்கு, ஆண்டு தோறும்  முதல் போக சாகுபடி நாற்று  நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணை யிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.  இந்நிலையில் முதல் போக பாசனத்திற்கு அணை யிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது .அதன்படி சனிக்கிழமை காலை பாசனத்திற்கு 200  கன அடி ,தேனி மாவட்ட குடி நீருக்கு 100 கன அடி என  300 கன அடி வீதம் 120 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப் பட்டது .பெரியாறு வைகை  வடிநில கோட்டம் (நீர்வளத் துறை), செயற்பொறியாளர் அன்புச்செல்வம் மதகை இயக்கி திறந்து வைத்தார் .இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர்கள் எஸ். மயில்வாகனன் (உத்தம பாளையம்), .குமார் (பெரி யார் அணை), உதவி பொறி யாளர்கள் பிரேம் ராஜ்குமார் (கம்பம்),.பிரவீன்குமார் (பழனிசெட்டிபட்டி), ராஜ கோபால் (கம்பம்), நவீன்  குமார் (தேக்கடி)உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

சிவகாசி அருகே கடன் பிரச்சனையால் 5 பேர்  தற்கொலை செய்த வழக்கு : 6 பேர் கைது

சிவகாசி, ஜூன் 2- சிவகாசி அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்  கொலை செய்த வழக்கில் கந்து வட்டிக்கு  பணம் கொடுத்த 6 பேரை போலீசார் கைது  செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த வர் லிங்கம்(45). இவரது மனைவி பழனி யம்மாள்(47). இருவரும் அரசு தொடக்கப்  பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆனந்தவள்ளி(27) என்ற மகளும், ஆதித்யா(14) என்ற மக னும் இருந்தனர். ஆனந்தவள்ளிக்கு திரு மணமாகி சஷ்டிகா என்ற 2 மாத குழந்தை இருந்தது.  இந்நிலையில் கடன் பிரச்சனை கார ணமாக கடந்த மே, 22 இல் ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு, லிங்கமும், பழனியம்மாளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் நடத்திய விசா ரணையில், கடன் பிரச்சனையால், லிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள் அளித்த மிரட்டலால் தான் தற்கொலைக்கு முயற்சித்தேன் என தெரிவித்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு லிங்கத்திற்கு கடன் கொடுத்த வர்களிடம் திருத்தங்கல் போலீஸார் விசா ரணை நடத்தினர். முடிவில் திருவில்லி புத்தூரை சேர்ந்த அருண்குமார் (43), திருத்தங்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணன்(42), கொங்கலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த  வி.முருகன்(69), எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.முருகன்(53), மணிவண்ணன் (43), சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார்(44) ஆகிய 6 பேர் மீது தற்கொ லைக்கு தூண்டுதல், கந்துவட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து. கைது செய்தனர்.  இந்தநிலையில், கந்து வட்டி தொடர்பாக பொது மக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப் துல்லா தெரிவித்துள்ளார். வாட்ஸ்-அப் உடன் கூடிய 94439 67578, 90427 38739 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள லாம் எனவும் தெரிவித்துள்ளார்.


 



 

 

;