districts

வைகாசி விசாக திருவிழா நெல்லை - திருச்செந்தூர் இடையே மே 22 இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தூத்துக்குடி, மே 19- வைகாசி விசாக திருவிழா வையொட்டி, மே 22 ஆம் தேதி  நெல்லை-திருச்செந்தூர் இடையே  சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் வைகாசி  விசாக திருவிழா மே 22 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இத னையொட்டி பக்தர்களின் வசதிக் காக அன்றைய தினம் நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதி வில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து காலை  6.40 மணிக்கு (வண்டி எண்:06857) சிறப்பு ரயில் புறப்பட்டு காலை 8.15  மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்:06858) சிறப்பு ரயில் காலை  9.15 மணிக்கு புறப்பட்டு நெல் லையை காலை 10.50 மணிக்கு வந்தடைகிறது. மேலும் நெல்லையில் இருந்து  (வண்டி எண்:06859) சிறப்பு ரயில் மதியம் 11.25 மணிக்கு புறப்பட்டு, 1  மணிக்கு திருச்செந்தூரை சென்ற டைகிறது. திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்: 06860) சிறப்பு ரயில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில்கள் பாளை யங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்ச னாவிளை, குரும்பூர், ஆறுமுக நேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில்  நிலையங்களில் நின்று செல்லும்.  இதில் 5 பொதுப் பெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித் துள்ளது. இதுதவிர நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு அதி காலை 4.30 மணி (செந்தூர் எக்ஸ்பி ரஸ்), காலை 7.25 மணி, 10.10 மணி,  11.40 மணி, மதியம் 1.30 மணி (பாலக்காடு எக்ஸ்பிரஸ்), மாலை 4.30 மணி, 6.50 மணிக்கு தினசரி ரயில்கள் உள்ளன. அதேபோன்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை க்கு காலை 7.20 மணி, 8.15 மணி,  மதியம் 12.20 மணி (பாலக்காடு எக்ஸ்பிரஸ்), 2.30 மணி, மாலை  4.25 மணி, 6.15 மணி, இரவு 8.25  மணிக்கு (செந்தூர் எக்ஸ்பிரஸ்)  தினசரி ரயில்கள் இயக்கப்படு கின்றன.

5 இடங்களில் வாகனம் நிறுத்தலாம்: எஸ்.பி. தகவல்

திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.பி., பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மே 22 அன்று நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு அதிகப்படியான வாகனங்கள் திருச்செந்தூருக்கு வரும் என்பதை உத்தேசித்து மாவட்ட காவல்துறை அறிவுரையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஒருங்கிணைப்புடன் வாகன நிறுத்தம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் நகர்ப்புறத்தில் கோயிலுக்கு மிக அருகில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர் நகராட்சி மூலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நூலகத்துக்கு எதிராக நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 400 கனரக வாகனங்கள் நிறுத்துமிடம், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் 500 கார் மற்றும் வேன்கள் நிறுத்துமிடம், திருச்செந்தூர் நீதிமன்றத்துக்கு எதிரே தனியார் மற்றும் செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான சுமார் 6 ஏக்கர் இடத்தில் 1,300 வாகனங்கள் நிறுத்துமிடம். திருச்செந்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் எதிராக வட்ட காவல் நிலையத்துக்கு மேற்கு பக்கமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 700 வாகனங்கள் நிறுத்துமிடம், திருநெல்வேலி ரோடு அனைத்து வியாபாரிகள் சங்கம் அருகே உள்ள திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 15 ஏக்கர் இடத்தில் சுமார் 2,500 வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூருக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, சாத்தான்குளம், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் பக்தர்கள் மேற்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

;