districts

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை இன்று கும்பகோணத்தில் சிறப்பு முகாம்

கும்பகோணம், ஜூலை 17-  

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப் படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை  பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை  வழங்கி வருகிறது.  

   இதுவரை அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம், செவ்வாயன்று (ஜூலை 18) கும்ப கோணம் பேருந்து நிலையம் அருகில், கே.எம்.எஸ்.எஸ் வளாகத்திலும், ஜூலை 25 அன்ற (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள  கிராம சேவை கட்டிடத்திலும் நடத்தப்பட உள்ளது.  

    இந்த முகாமில், எலும்பு முறிவு மருத்துவர், காது,  மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்து வர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து வழங்க உள்ள மருத்துவச் சான்றின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை அடை யாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்  படத்துடன், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களு டன் வந்து கலந்து கொள்ளலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், இந்த முகாமில் உரிய ஆவ ணங்களுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பிக்கலாம் என தஞ்சை  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.