districts

img

பெட்டிக்கடைக் காரரின் சமுதாயப் பணி

திருவாரூர், டிச.12- திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வரம்பி யம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஏ.யாக்கோப். இவர் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் எதிரில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.  கடந்த 40 ஆண்டு காலமாக ஆற்றின் குறுக்கே மரப்பாலம் ஒன்றை தனது சொந்த செலவில் அமைத்து பராமரித்து வருகிறார். அர சாங்கம் புதிதாக நிரந்தர சிமெண்ட் பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.  வரம்பியம் ஊராட்சியில் 1வது வார்டு ஆற்றங்கரைத் தெரு மற்றும் கொத்த மங்கலம் ஊராட்சி பள்ளங் கோயில் 1வது வார்டு கீழத்தெரு ஆகிய பகுதி களை இணைக்கும் வகை யில் இந்த மரப்பாலம் அமைந்துள்ளது. முள்ளி யாற்றின்மேல் அமைந்துள்ள இந்த பாலம் வழியாக இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த அனைத்து பகுதி மக்களும் ஆற்றினை கடந்து தங்களின் அன்றாடப் பணி களை செய்து வருகின்றனர்.

சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை மிகவும் சிரமப்பட்டு இருகரைக்கும் கொண்டு செல்கின்றனர். பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் பலரும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பற்ற நிலையில் அச்ச உணர்வோடுதான் அனைவரும் இந்த பாலத்தில் செல்கின்றனர். கனமழை யின்போதும் ஆற்றின் அதி கமாக நீர் செல்லும்போது இந்த பாலத்தில் செல்வது மிகுந்த ஆபத்தாகும்.  இரண்டு ஊராட்சிக ளையும் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்த பாலத் தின் வழியே தங்களின் பணிக்கு செல்கின்றனர்.  இந்த பாலத்தை கடந்த 40 ஆண்டுகாலமாக ஆண்டு க்கு ஒருமுறை சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை செல வழித்து தனது சொந்த பொறுப்பில் சீரமைத்து வரு கிறார் சிறுதொழில் செய்து பிழைத்துவரும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஏ.யாக்கோப் (53).  இதுகுறித்து பலமுறை அரசிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் பாலத் தை நிரந்தர பாலமாக கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இப்பகுதி மக்களின் நலன்கருதி இந்த பாலத்தை அரசு கட்டிதர வேண்டும்.

 இரண்டு ஊராட்சிகளை இணைக்கும் பாலமாக உள்ளதால் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து அல்லது மாவட்ட ஊராட்சி யின் சிறப்பு நிதியை பெற்று இப்பாலத்தை கட்டிதர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோருகின்றனர்.  நாடாளுமன்ற உறுப்பி னர் மற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் கோரிக்கைகளை ஏற்று உதவிட முன்வரவேண்டும். இந்த பாலம் பழுதடைந்தால் இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்த மக்கள் பல கி.மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்ற மக்களின் சிரமத்தை உணர்ந்து இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களும் இந்த கோரிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி பொதுப் பணித் துறையின் அனு மதியையும் பெற்று புதிய நிரந்தர பாலம் கட்டித்தரு வதற்கு உடனடி முயற்சி யையும் மேற்கொள்ள வேண்டும்.

;