திருவாரூர், டிச.1 - திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் பயிர் சேதத்திற்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் முன்பாக முழக்கம் எழுப்பினர். கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கூறி னார். கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்ட செயலாளர் வி.எஸ். கலியபெருமாள் ஆகியோர் பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 2020-க்கான இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை 15 ஆயி ரம் பேருக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். கரூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைப் போல நெகிழி ஒழிப்பை உறுதியாக நடைமுறைப்ப டுத்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இயந்திரம் மூலமாக அதிக அளவில் நெல்லை வெளியேற்றுவதால் மீண்டும் விவசாயிகள் அதனை தூக்கிக் கொண்டு வருவதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே சம்பா அறுவடை துவங்குவதற்கு முன்பாக இயந்திரங்களை பழுது பார்த்து கருக்காய் மட்டும் வெளியேறும்படி சீரமைக்க வேண்டும்.
கிராமப்புற அடிப்படை வசதிகளை மேம்ப டுத்த வேண்டும். நகைக்கடன் தள்ளுபடி தொ டர்பான அரசாணை கூட்டுறவு சங்கங்களுக்கு தெளிவாக வழங்கப்படவில்லை. துறை பதி வாளர் இதனை சரிசெய்ய வேண்டும். தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். ஆய்க்குழி, சத்துவாச்சேரி, காவாளக்குடி, ஆலங்குடி, அத்திக்கடை ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலை களை செப்பனிட வேண்டும். யூரியா, டிஏபி உரத் தட்டுப்பாட்டை போக்கி விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நீடாமங்கலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். வையகளத்தூரில் தனியாக ரேசன் கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.