பொன்னமராவதி ஸ்ரீ துர்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வாங்க சிரிக்கலாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகி ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் அரசு மருத்துவ அலுவலர் நவரத்தினசாமி தலைமை வகித்தார். அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மரிய புஷ்பம் சிறப்புரையாற்றினார். பொன்னமராவதி முத்தமிழ் பாசறை அறங்காவலர் குழு செயலாளர் நெ.ரா. சந்திரன் உரையாற்றினார்.