திருவாரூர், ஏப்.20-
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் ஓஎன்ஜிசியின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் சுமார் ரூ.13.7 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் கழிவறை வசதிகளுடன் நவீன வடிவமைப்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திறந்து வைத்து, சிறப்பு குழந்தைகளின் பயிற்சி பற்றியும், அவர்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தரராஜன், ஓ.என்.ஜி.சி குழும பொது மேலாளர் மாறன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, புலிவலம் ஊராட்சிமன்ற தலைவர் காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.