மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. வட்டாட்சியர் ஹரிதரன் தலைமையில், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் 40 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.