புதுக்கோட்டை, டிச.7 - பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 86 விவசாயி கள் கைது செய்யப்பட்டனர். பயிர் காப்பீடு செய்துள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போ ராட்டத்தில், விவசாயிகள் சங்க ஒன்றிய செய லாளர் எம்.எஸ்.கலந்தர், தலைவர் ராதாகி ருஷ்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்ளிட்ட 86 விவசாயி களை போலீசார் கைது செய்துள்ளனர்.