districts

img

பழுதான மின்கம்பத்தை சரி செய்ய கோரிக்கை

தஞ்சாவூர், டிச.1 - தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அருகே உள்ள மல்லிப் பட்டினம் புதுமனைத்தெரு மசூதி அருகே அமைந்துள்ள மின்கம்பத்தில் உள்ள பெட்டி யில் இருந்து கீழே தொங்கும்  மின் வயர்கள் பொதுமக்க ளுக்கு மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப்  பகுதி வழியாகத்தான் மதரஷா மற்றும் பள்ளிகளுக்கு சிறு வர்கள், மாணவர்கள் சென்று வரக்கூடிய சூழல் இருக்கிறது. சிறுவர்கள் கவனிக்காமலோ, விளையாட்டுத்தனமாகவோ அந்த மின் வயர்களை தொடக் கூடிய அபாயமும் இருப்பதா லும், ஏதேனும் பாதிப்புகள் ஏற்ப டுவதற்கு முன்னரே மின்வாரி யம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.