வேதாரண்யம், ஜூலை 8-
மேகதாது அணை கட்டிட ஒன்றிய நீர்வளத்துறை அமைச்ச ரிடம் அனுமதி கோரிய கர்நாடக துணை முதல்வரை கண்டித் தும், ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தும், இதுவரை கடைமடை பாசன பகுதிக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. இதனால் குறுவை நடவுப் பயிர்கள் காய்ந்தும், தெளித்த விதைகள் கருகியும் வருகின்றன.
சாகுபடியை பாதுகாத்திட தமிழக அரசு காவிரி வெள் ளாற்று பாசனத்திற்கு சுழற்சி முறையில் தொடர்ந்து பத்தா யிரம் கனஅடி நீரை உடனே வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தணிக் கோட்டகம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் அறி விக்கப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறிய லில் ஈடுபட முன்வந்தனர். வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், காவல் ஆய்வாளர் கன்னிகா மற்றும் பொதுப் பணித் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி, புதன்கிழமைக்குள் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் சாலை மறியல் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.