districts

திருச்சி முக்கிய செய்திகள்

வாகன நெரிசலை  சரிசெய்ய கோரிக்கை

பாபநாசம், ஜுன் 12 -  தஞ்சாவூர் மாவட்டம் பாபநா சம் - சாலியமங்கலம் சாலை  முக்கிய சாலையாக திகழ்கிறது.  இந்தச் சாலை வழியே மெலட் டூர், திட்டை, தஞ்சாவூர் செல்ல லாம். 16 கி.மீ நீளமுள்ள சாலை யில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. பாபநாசம் பேரூராட்சி எல்லைக்குள் தனியார் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரி, அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, சர்ச், புதிய  பேருந்து நிலையம், ரயில் நிலையம், டாஸ்மாக், ஜூவல் லரி, மெடிக்கல் ஷாப், மளிகை கடைகள், ஸ்வீட் கடைகள், எலெக்ட்ரிக்கல் கடை என பல கடைகள் உள்ளன. இதனால் இந்தச் சாலையில் வாகன நெரிசல் அதிகம். திருமண நாட்களில் இந்தச் சாலையில் செல்வது மிகவும் சிரமம்.  இச்சாலை அருகே ரயில்வே  கேட் உள்ளது. ரயில்வே கேட்  மூடப்படும் போது இரு புறமும்  வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்கும். இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் நெரிச லில் சிக்கிக் கொள்கிறது. இந்தச் சாலையில் ஏற்படும் வாகன நெரிசலை சரிசெய்ய,  மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜூன் 15-இல்  பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

கரூர், ஜூன் 12- கரூர் மாவட்டத்தில் பொது  விநியோகத் திட்ட மக்கள் குறை தீர் கூட்டம் ஜூன் 15 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல்  1 மணி வரை நடைபெற உள்ளது.  அன்றைய தினம் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ண ராயபுரம்  மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெ யர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப  அட்டை கோருதல், கைப்பேசி  எண் பதிவு மற்றும் பொது விநி யோக கடைகளின் செயல்பாடு கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த  புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளிக்க லாம். எனவே பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்திக் கொள் ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூன் 12 - தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட, கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் பருத்தி மறைமுக ஏலம் புதனன்று நடந்தது. மறைமுக ஏலத்தில் கும்ப கோணம் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளான கொற்கை, சிவ புரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 342 விவசாயிகள் பருத்தியை எடுத்து வந்திருந்தனர். இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், விழுப்புரம், பண் ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  8 வணிகர்கள் கலந்து கொண்ட னர்.  கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.அன்பழகன் ஏலப் பணிகளை பார்வையிட் டார். இந்த ஏலத்தில் 48.500 மெ.டன் அளவு பருத்தி வரப் பெற்றது. அதிகபட்சம் குவிண் டால் ஒன்றிற்கு ரூ.7079, குறைந்தபட்சம் ரூ.5189 மற்றும்  சராசரி ரூ.6069 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.29 லட்சம்.  தஞ்சாவூர் விற்பனை குழு  செயலர் மா.சரசு தலைமை யில், விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் மு. பிரியமாலினி முன்னிலையில் மறைமுக ஏலம் நடைபெற்றது.

தொழிலதிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

தஞ்சாவூர், ஜூன் 12-  தஞ்சாவூரில் தொழிலதிபர் அரிவாளால் வெட்டி கொலை  செய்யப்பட்ட வழக்கில், 3 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் கே.பாபு (48). திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர்  காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்த தாரராக இருந்து வந்தார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக, காரில் தனது மகன் பாலமுருகனுடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு காலையில் வந்தார்.  இவரை தஞ்சாவூர் ஞானம் நகரில் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால், பலத்த  காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள சீதா நகரைச் சேர்ந்த  ஏ.முருகேசன் (59), தஞ்சாவூர் அருகே வயலூர் ராமாபுரத்தைச்  சேர்ந்த பி.சிவக்குமார் (48), கொண்டி ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேசன் (48) ஆகியோரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாபுவுக்கும், முருகேசன், சிவக்குமார், கணேசன்  ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. மேலும், முருகேசன், சிவக்குமார், கணேசன் ஆகியோர் காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரியை வாங்கி, அதில் எம்.சாண்ட்டை கலப்படம் செய்தது குறித்து தொடர்பு டைய அலுவலர்களிடம் பாபு புகார் செய்தார்.  இந்த முன் விரோதம் காரணமாக பாபு கொலை செய்யப் பட்டார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, முருகேசன்,  சிவக்குமார், கணேசன் ஆகியோரை காவல் துறையினர் திங்கள் கிழமை இரவு கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை  ஜூலை 12-க்கு ஒத்திவைப்பு

துக்கோட்டை, ஜூன் 12- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்  குவிப்பு வழக்கு விசாரணை  ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேர வைத் தொகுதி உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற  விசாரணைக்குப் பிறகு, ஜூன் 12 ஆம் தேதிக்கு வழக்கு விசா ரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்படி இவ்வழக்கு  விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. விஜயபாஸ்கர்  தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராயினர். வழக்கு விசார ணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஜி. சுபத்ராதேவி  ஒத்திவைத்தார்.

பட்டுக்கோட்டை, பாபநாசத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

பட்டுக்கோட்டை/பாபநாசம், ஜுன் 12- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி), அனைத்து வருவாய் கிராமங்களி லும், கிராம நிர்வாக அலுவலர்களால் பரா மரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு, தஞ்சாவூர், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 13 அன்று தொடங்கி 28  ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த முகாம் ஒவ்வொரு நாளும் காலை 9  மணிக்கு தொடங்கும். குறிச்சி சரகத்திற்கு ஜூன் 13, திருச்சிற்றம்பலம் சரகத்திற்கு ஜூன்  14, அதிராம்பட்டினம் சரகத்திற்கு ஜூன் 18,  தம்பிக்கோட்டை சரகத்திற்கு ஜூன் 20, நம்பி வயல், பெரியகோட்டை சரகத்திற்கு ஜூன் 21,  துவரங்குறிச்சி சரகத்திற்கு ஜூன் 25, மதுக் கூர் சரகத்திற்கு ஜூன் 26, ஆண்டிக்காடு சரகத் திற்கு ஜூன் 27, பட்டுக்கோட்டை சரகத்திற்கு  ஜூன் 28 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடை பெற உள்ளது.  பொதுமக்கள் தங்களது மனுக்களை, ‘முதல்வரின் முகவரி’ என்ற இணையதளத் தில் இணைய வழியாக cmhelpline-dash board.tnega என்ற இணையதள முகவரி யிலோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாகவோ, வருவாய் தீர்வாயத்தில் மனுக் களை பதிவு செய்ய வேண்டும். வருவாய்  தீர்வாயத்தில் பொதுமக்களிடம் பெறப்படும்  மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சி யர் த.சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாபநாசம் பாபநாசம் வட்ட அலுவலகத்தில் 1433 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி), கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில், ஜூன்  13 முதல் 25 வரை தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுதா ராணி தலைமையில் காலை 9 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது.  அய்யம்பேட்டை சரகத்திற்கு ஜூன் 13,  கபிஸ்தலம் சரகத்திற்கு ஜூன் 14, பாபநாசம்  சரகத்திற்கு ஜூன் 18, மெலட்டூர் சரகத்திற்கு  ஜூன் 20, சாலியமங்கலம் சரகத்திற்கு ஜூன் 21,  அம்மாப்பேட்டை சரகத்திற்கு ஜூன் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில்  நில உடமையாளர்கள் பட்டா மாறுதல் மற்றும் நிலங்கள் குறித்த எல்லை பிரச்சனை களுக்கு தீர்வு காணுதல், பொதுமக்கள் வீட்டு மனை ஒப்படை, நில ஒப்படை மற்றும் முதி யோர் உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வருவாய் தீர்வாய  (ஜமாபந்தி) அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மின் நகர் பகுதி கம்பர்  நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி அஞ்சலிதேவி (65).  இவர் ஏப்ரல் 29 அன்று புதுக்கோட்டையிலுள்ள மகள் வீட்டுக்குச்  சென்றார். இதையடுத்து, மே 19 அன்று மற்றொரு மகள் வீட்டைப்  பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டார். இந்நிலையில், ஜூன் 6 அன்று இவரது வீட்டு முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பக்கத்து வீட்டினர் மூலம்  அறிந்த அஞ்சலிதேவி, திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில்  இருந்த 17 பவுன் நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு  போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் காவல் நிலை யத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்றொரு சம்பவம்  இதேபோல, நார்த்தேவன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி பிரீத்தீஸ்வரி (23). இவர் மே 20 அன்று  திருமண விழாவுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது, பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் திருடு போயிருப்பது  தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

;