districts

img

மின்வாரிய நிர்வாகத்தை முடக்கியுள்ள உத்தரவு 2-ஐ ரத்து செய்யக் கோரிக்கை

கரூர், மார்ச் 8- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  கரூர் மாவட்டக் குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம், சிஐடியு கூட்டரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் பேரவையை துவக்கி வைத்துப் பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் க.தனபால், மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீ தேவி ஆகியோர் பேசினார். மாவட்ட பொரு ளாளர் கே.செல்வம் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.  மின் வாரியத்தில் உள்ள புதிய கம்பெனி களை அரசின் கம்பெனிகளாக செயல்பட  உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஓய்வூதிய தாரர்களுக்கு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும். நஷ்டம் அடைந்த நிர்வாக மாக கணக்கில் கொண்டு, மின்வாரிய நிர்வா கத்தை முடக்கியுள்ள மின்வாரிய உத்தரவு 2-ஐ ரத்து செய்ய வேண்டும். பிரிக்கப்பட்ட கம்பெனிகளுக்கு முழு நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும். 01.04.2003-க்கு பிறகு மின்  வாரிய பணியில் சேர்ந்த சுமார் 35 ஆயிரம்  தொழிலாளர்களின் பணி, சமூக பாதுகாப்பு என்ற ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.