districts

குடியரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

பொன்னமராவதி, மே 15 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திரா விடர் கழகத்தின் சுயமரியாதை இயக்கம், “குடியரசு” இதழ்  நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடை பெற்ற பொதுக் கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சித.ஆறு முகம் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் க. ஆறுமுகம் வரவேற்றார். மாநில திராவிட மாணவர் கழகச்  செயலாளர் செந்தூரபாண்டியன் தொடக்க உரையாற்றி னார். திராவிடர் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணைச்  செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.