districts

வாலிபர் சங்கம் சார்பில் குளிர்பானம் வழங்கல்

திருநெல்வேலி, ஜூலை 2-

    நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தில் மக்கள்  ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நெல்லை டவுண் பகுதி குழு சார்பாக பொது மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர தலைவர் இசக்கி தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்எஸ்  இளங்கோ துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக  ஒவியர் புருஷோத்தமன் (மே17 இயக்கம்) கலந்து கொண்டு  பொதுமக்களுக்கு குளிர் பானம் வழங்கினார். இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சைலஸ்  அருள்ராஜ், மாதர்சங்க பகுதிக்குழு பொருளாளர்  ஆனந்தி, வாலிபர் சங்க பகுதிக்குழு பொருளாளர் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.