districts

img

இஎஸ்ஐ மருத்துவமனையின் தரத்தை உயர்த்துக அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு கோரிக்கை

கரூர், ஜூலை 11-

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் 1 ஆவது வட்டத்தின் 13 ஆவது வட்ட  மாநாடு கரூரில் நடைபெற்றது.

     கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆர்.சிவ குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர்  சங்க முன்னாள் மாநில துணை செயலா ளர் மு.சுப்ரமணியன், மாநிலத் துணைத் தலைவர் மு.செல்வராணி, மாவட்ட தலை வர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செய லாளர் கெ.சக்திவேல் ஆகியோர் மாநாட் டில் பேசினர்.

    கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால், இஎஸ்ஐ மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும். இஎஸ்ஐ மருந்தகத்தில் ஊழி யர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு ஊழியர் கள், அங்கன்வாடி, கிராம நிர்வாக உதவியா ளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோரை  அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.  

    கரூர் மாநகரத்தில் அரசு அலுவலகங் கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சி அலு வலகத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டி டங்கள் காலியாக உள்ளன. அதை அலு வலகங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வீணாக கட லில் கலக்கும் தண்ணீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.