districts

img

சிபிஎம் போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளராக ஆர்.மணிமாறன் தேர்வு

புதுக்கோட்டை, டிச.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து இடைக்கமிட்டி செய லாளராக ஆர்.மணிமாறன் தேர்வு செய்யப்பட்டார். புதுக்கோட்டை அரசு  போக்குவரத்து இடைக்க மிட்டி மாநாடு சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. மாநாட்டிற்கு கே. கார்த்திக்கேயன், ஆர்.மணி மாறன், டி.சந்தானம் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  எஸ்.சாமியய்யா வரவேற் றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு  உறுப்பினர் என்.கண்ணம் மாள் பேசினார். வேலை  அறிக்கையை இடைக்கமிட்டி செயலாளர் எம்.தரணி முத்துக்குமார் முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.பாலசுப்பிரமணி யன், கே.முகமதலிஜின்னா பேசினர். மாநாட்டில் புதிய  இடைக்கமிட்டி செயலாள ராக ஆர்.மணிமாறன் தேர்வு  செய்யப்பட்டார். அவருடன் 9  பேர் கொண்ட இடைக்கமிட்டி யும். 3 பேர் பேர் கொண்ட  மாவட்ட மாநாட்டு பிரதிநிதி களும் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் நிறை வுரையாற்றினார். போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கான 14-வது  ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை உடனடியாக  பேசி முடிக்க வேண்டும்.   அனைத்துப் பணிமனை களிலும் பேருந்து டூட்டி  போஸ்டிங்கை முறைப்ப டுத்தி ஒப்பந்தப்படி சுழல்மு றையை அமுல்படுத்த வேண் டும். பராமரிப்புப் பணியா ளர்களை பேருந்து கழுவு வது, சாக்கடையை சுத்தம் செய்வது, கழிப்பறை சுத்தம்  செய்வது போன்ற வேலை களில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.