districts

img

வினாடி - வினா போட்டியில் மாநில அளவில் வெற்றி எருமல் அரசுப் பள்ளி மாணவரை துபாய்க்கு அழைத்துச் செல்கிறது பள்ளிக்கல்வித்துறை

மயிலாடுதுறை, டிச. 5 - மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற செம்பனார்கோவில் அருகேயுள்ள எருமல் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவரை 4 நாள்  கல்வி பயணமாக தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை துபாய் நாட்டிற்கு  அழைத்து செல்கிறது.  மயிலாடுதுறை மாவட்டம் (சீர்காழி  கல்வி மாவட்டம்) செம்பனார்கோ வில் ஊராட்சி ஒன்றியம் சேமங்கலம்  ஊராட்சிக்குட்பட்ட எருமல் கிராமத் திலுள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளி யில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் சேமங்கலம் தெற்குத்தெருவைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன் இணைய வழியில் மாநிலம் முழுவ தும் 993 மாணவர்கள் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றார்.  இதையடுத்து அத்துறையின் சார்பில் துபாய் நாட்டிற்கு அழைத் துச் செல்லப்படுகிறார். டிசம்பர் 8  முதல் 12 வரை அங்கு தங்கி, அந்நாட்டு  பள்ளிகளில் கல்வி கற்கும் முறை,  தொழில்நுட்பம், புகழ்பெற்ற மிராக் கில் கார்டன், எக்ஸ்போ, செயற்கை மீன்களின் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிடுகின்றனர். மாணவர்க ளுக்கான விமான போக்குவரத்தி லிருந்து உணவு, தங்குமிடம் போன்ற  வசதிகளை கல்வித்துறை செய்கிறது.

தனது குழந்தையை போல புகழ்ந்த தலைமையாசிரியை

தமிழகத்திலிருந்து செல்லும் 100  மாணவர்களில் ஒருவரான விஷ் ணுவை சந்திக்க எருமல் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று, பள்ளி தலைமையாசிரியை எஸ்.அருள்ஜோதியை விசாரித்த போது அவர் கூறுகையில், “நல்லா படிக்கிற  பையன் விஷ்ணு. வினாடி - வினா வில் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்திலிருந்து தேர்வான 3 மாணவர்களில் விஷ்ணுவும் ஒருவர்.  மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும் பத்தை சேர்ந்தவர். தந்தையும், தாயும் கூலி தொழிலாளிகள். முறையாக வீட்டு வசதியில்லாத குடும்பத்தில் இருந்தாலும் படிப்பில் திறமையான வன். விஷ்ணுவின் வெற்றியால் பள்ளி யையும், கிராமத்தையும் பலரும் பாராட்டுகின்றனர். விமானத்தில் செல்ல பாஸ்போர்ட் உடனடியாக தேவை என்பதால் ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்களின் துரித முயற்சியில், தற்போது பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம். மாண வன் விஷ்ணு துபாய் செல்வதற் காக, எங்கள் தரப்பிலான எல்லா பணி களையும் செய்துவிட்டோம். துபாய் சென்று திரும்பிய பிறகு கிராம மக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் பாராட்டு நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

எளிய மாணவர்கள் பயிலும் இப் பள்ளிக்கு விஷ்ணுவின் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு நாளும் பாராட்டுக் களும், உற்சாகமும் வரு கிறது. இப்பள்ளியை தெரியாதவர்க ளுக்கும் இப்போது தெரிந்துவிட்டது.  இப்பள்ளியில் பயிலும் 120 மாண வர்களுமே வசதி, வாய்ப்பற்ற ஏழை  குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். மாணவர்களுக்கு பாடத்தை மட்டும் கற்றுத் தராமல் விஞ்ஞான அறி வையும், பல தரப்பட்ட பொது சிந்த னைகளையும் போதிப்பதில் எங்கள் பள்ளியின் சக ஆசிரியர்களும் மிக திறமையானவர்கள். ஒவ்வொரு மாண வர்களும் பாடங்களை கற்றுக்கொள் வதிலும், சாதித்துக் காட்டுவதிலும், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனமாக கேட்டு தேர்வெழுதி வெற்றி பெற்று பாராட்டை பெறுப வர்கள்” என மாணவர்களை தனது குழந்தைகளை போல புகழ்ந்து தள்ளினார்.

சீர்காழி எம்எல்ஏ-வின் ஊக்கப்பரிசு

துபாய் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் மாணவர் விஷ்ணுவை முதன்மை கல்வி அலுவலர் க.மதி வாணன், மாவட்ட கல்வி அலுவலர் (சீர்காழி) க.செல்வராஜ் ஆகியோர் பாராட்டினர். இதனிடையே நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரி வித்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பன்னீர்செல்வம், தனது சொந்த நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை மாணவருக்கு ஊக்கப்பரிசாக வழங்கி யுள்ளார். மேலும் ஒன்றியக் குழு  உறுப்பினரும் பள்ளியின் பெற்றோர்  - ஆசிரியர் கழக பொருளாளருமான ரஜினி, ஊராட்சி தலைவர் உள்ளிட் டோரும் பாராட்டி பரிசுகளை வழங்கி னர். இதனிடையே பள்ளிக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் எம்.ராசத் துரை, துணைத்தலைவர் சக்திவேல்,  பெற்றோர் ஆசிரியர் கழக பொருளா ளர் ரஜினி, மாணவர் விஷ்ணுவை பாராட்டி சால்வை அணிவித்து புகைப் படம் எடுத்து கொண்டனர். கல்வி வியாபாரமாகி விட்ட காலத் தில் அரசுப் பள்ளிகளின் தேவையும்,  அப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டி யதும் மிக அவசியம். கிராமப்புற அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்க ளும் மாணவர்கள்தான். அவர்களால் தான் நிறைய சாதனைகளை, சத்தமே  இல்லாமல் சாதிக்க முடிகிறது என்ப தற்கு எருமல் அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒரு சான்றாகும்.  - செ.ஜான்சன், தரங்கம்பாடி

;