districts

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி

திருவாரூர், ஜூலை 9 -

    திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய சத்துணவாக சாம்பார்  சாதம் மற்றும் வேகவைத்த முட்டை  வழங்கப்பட்டுள்ளது. இதனை மாண வர்கள் சாப்பிட்ட பிறகு, 2 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் தங்களுக்கு வாந்தி, வயிற்று வலி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்ட மாணவர்களை, பள்ளி ஆசிரி யர்கள் உடனடியாக திருவாரூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 11 மாணவர்களுக்கு மருத்து வர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அதிகாரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து மாணவர்களின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

     மேலும் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. பின்னர் மருத்துவக் குழு ஒன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, மதிய உணவு சாப்பிட்ட 50-க்கும்  மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.

   பள்ளிக்கு நேரில் சென்ற மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றி யச் செயலாளர் என்.இடும்பையன் பள்ளி மாணவர்களிடம் உடல் நலம்  குறித்து விசாரித்தார். மேலும் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சையில் இருந்த  மாணவர்களின் உடல்நலன் குறித்து கல்லூரி முதல்வரிடம், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் விசாரித்தார்.

;