புதுக்கோட்டை, ஜூலை 23 -
6 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்றன.
போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். மன்னர் கல்லூரி தேர்வு நெறியா ளர் கணேசன், பேராசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேச்சுப்போட்டியில் முதல் பரிசை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி ச.ஜமுனா, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் முறையே வி.ஜெய லெட்சுமி, சா.சஸ்ரீனா பிர்தவுஸ், ஆறுதல் பரிசுகளை ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி மாணவி செ.ஜோதி, மதர் தெரசா மருந்தியல் கல்லூரி மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் பெற்றனர்.
கவிதை மற்றும் குறும்படப் போட்டிகள் நடுவர் குழுவினருக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு களும், சான்றிதழ்களும் புத்தகத் திருவிழா மேடையில் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.