districts

புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுக்கோட்டை, டிச.9-  புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வியாழனன்று வெளி யிட்டார். புதுக்கோட்டை நகராட்சியில் 60,668 ஆண் வாக்காளர்கள், 64,984 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,25,669 வாக்காளர்களும், அறந்தாங்கி நகராட்சியில் 16,573 ஆண் வாக்காளர் கள், 18,065 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 34,638 வாக்காளர்களும் உள்ளனர். பேரூராட்சிகளைப் பொறுத்தவரை ஆலங்குடியில் 9,732, அன்னவாசலில் 7,517, அரிமளத்தில் 7,232, இலுப்பூரில் 11,982, கறம்பக்குடியில் 12,993, கீர மங்களத்தில் 7,780, கீரனூரில் 9,438, பொன்னமராவதியில் 10,892 வாக்கா ளர்கள் என பேரூராட்சிகளில் 38,036 ஆண், 39,527 பெண், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 77,566 வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 1,15,277 ஆண் வாக்காளர்களும், 1,22,576 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர்.  நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக ளில் மொத்தம் 280 வாக்குப்பதிவு மையங் கள் உள்ளன. 45 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்ப சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்) என்.கிருஷ்ணமூர்த்தி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;