அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீது அதிகளவு ஜிஎஸ்டி வரி விதித்து மக்களை வதைக்கும் மோடி அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழனியில் மின்வாரிய அலுவலகம் அருகே மக்கள் சந்திப்பு பிராச்சாரக்கூட்டம் நடைபெற்றது. நகர்க்குழு உறுப்பினர் பி. மனோகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராஜமாணிக்கம், எம்.ராமசாமி நகரச்செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான கே. கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பகத்சிங் ஆகியோர் பேசினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.