தஞ்சாவூர், நவ.29 - தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மகாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை யின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 500 பயனாளி களுக்கு ரூ.92 லட்சத்து 83 ஆயிரத்து 502 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழி யன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில், தஞ்சாவூர் வட்டத்திற் குட்பட்ட 115 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 272 மதிப்பிலான விலை யில்லா வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப் புத் திட்டத்தின் கீழ் 254 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகை, 30 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பி லான சலவை பெட்டிகள் வழங்கப்பட்டன.
மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் ஆதாரம் நிதியுதவி, வேளாண்மை துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 190 மதிப்பில் தார்ப்பாய்கள், மரக்கன்றுகள் மற்றும் விசைத் தெளிப்பான் கள், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 40 மதிப்பில் வேளாண் இடுபொருட்களும், தாட்கோ துறை யின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் வங்கி கடனுக்கான ஆணைகள், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 500 பயனா ளிகளுக்கு 92 லட்சத்து 83 ஆயிரத்து 502 மதிப்பி லான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு ஊராட்சி ஒன்றியம் காட்டுக்கோட்டை, கரம்பை-8, நாகத்தி மற்றும் குழிமாத்தூர் ஆகிய ஊராட்சிகளில் வடகிழக்கு பருவமழை யினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த நெற்ப யிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வரு வாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி.நீலமேகம்(தஞ்சாவூர்), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.கே.முத்து, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.