தஞ்சாவூர், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளிக்கு, தமிழக அரசு தொடக்கக் கல்வித்துறை சார்பில் 2019-20 ஆம் ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. பேராவூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்எல்ஏக்கள், கல்வி அதிகாரிகள் பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ராதேவியிடம் வழங்கினார். இதேபோல், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவி அ.கோபிகா பத்து, பன்னிரெண்டு ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக 2020-21 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது வழங்கப்பட்டது. மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை, பள்ளி தலைமையாசிரியர் சுகுணா முன்னிலையில் அமைச்சர் வழங்கினார்.