கும்பகோணம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் தனியார் பேருந்துகள், கட்டணம் வசூலிப்பதற்காக மாணவர்களை படியில் தொங்கியபடி பயணம் செய்ய அனுமதிக்கின்றன. இது மாணவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ள வழிவகுக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை இதில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.