districts

திருச்சி முக்கிய செய்திகள்

பூம்புகார் எம்எல்ஏ  அலுவலக சீல் அகற்றம்

மயிலாடுதுறை, ஜூன் 7 - தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜூன்  4 அன்று வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்தல் நடத்தை விதி  முறைகள் கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தன. 

அதன்படி மார்ச் 16 அன்று மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு  தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமையில் பூட்டி  சீல் வைக்கப்பட்டது. 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததை  ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல், வெள்ளியன்று தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமையில், தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் பாபு முன்னிலையில் சீல் அகற் றப்பட்டது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் வைக்கப் பட்டிருந்த சீலும் அகற்றப்பட்டது.

முதியவரிடம் இணைய வழியில் ரூ.14.41 லட்சம் மோசடி 

தஞ்சாவூர், ஜூன் 7-  தஞ்சாவூர் மாநகரைச் சேர்ந்த 64 வயது முதியவர் தனி யார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கு டெலிகிராம் செயலியில், இணைய வழியில் வர்த்தகம் செய் தால் அதிக லாபம் ஈட்டலாம் என தகவல் வந்தது. இதை நம்பி,  மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு முதியவர் பல்வேறு  தவணைகளில் ரூ.14,41,345 அனுப்பினார். 

இதில் எந்தவித லாபத் தொகையையும் தராத மர்ம நபரை,  முதியவர் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், மர்ம  நபர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இதுகுறித்து தஞ்சா வூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் முதியவர் புகார் செய்தார்.  அதன்பேரில் காவல் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீர்நிலைகளில் சிக்கியவர்களை  மீட்கும் செயல் விளக்கம் 

தஞ்சாவூர், ஜூன் 7-  தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப் பட்டினம், பள்ளிவாசல் குளத்தில், பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ஆப்த மித்ரா குழு இணைந்து, நீர் நிலைகளில் விபத்துகளில் சிக்கிய வர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி அளித்தன.

பட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் கருணாகரன், பட்டுக் கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம், பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன், பேரி டர் மேலாண்மை பொறுப்பாளர் காம்ளின் ஆகியோர் முன்னி லையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்க மளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மூலம் நீர்நிலைகளில் விபத்துகளில் சிக்கித்  தவிப்பவர்களை, நம்மையும் தற்காத்துக் கொண்டு எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப் பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு அழைப்பு

கும்பகோணம், ஜூன் 7- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசினர் கலைக்  கல்லூரி 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு 10.6. 2024 முதல் 13.6.2024 வரை நடைபெறுகிறது. 

ஜூன் 10 (திங்கள் கிழமை) தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதலுக்கான 400  மதிப்பெண்களில், 400 மதிப்பெண் முதல் 300 வரை பெற்று  இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஜூன் 11 (செவ்வாய்) அன்று 299 முதல் 270  வரை பெற்ற மாணவர்களும், ஜூன் 12 (புதன் 269 முதல் 240  வரை பெற்ற மாணவர்களும் கலந்து கொள்ளலாம். 

ஜூன் 13 (வியாழன்) அன்று சிறப்புத் தமிழ் படித்த அனைத்து மாணவர்களும், தமிழ்ப் பாடத்தில் 70 மற்றும் அதற்கு மேல் பெற்று இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்கள் பி.ஏ. தமிழ்ப் பாடத்திற்கும், ஆங்கி லப் பாடத்தில் 50 மற்றும் அதற்கு மேல் பெற்று இக்கல்லூ ரிக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்கள் பி.ஏ. ஆங்கி லப் பாடத்திற்கும் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்: குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி

அரியலூர், ஜூன் 7 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு 90 காலிப்  பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 28 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் சிறந்த பயிற் றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. அதிக அளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வு களும் நடத்தப்படவுள்ளன.

எனவே தேர்வில் பங்கேற்க உள்ள மாண வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து  பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

 

;