districts

img

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரோட்டம்

தஞ்சாவூர், மே 5-  

   தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு  நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத் தில் வள்ளி தெய்வானையுடன் முருகன்  தேரில் எழுந்தருளினார். இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.  

   விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ மா.கோவிந்தராசு, ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தொழில் அதிபர் கந்தப்பன், டாக்டர் ஜே.சி. குமரப்பா கல்வி குழுமத் தலை வர் ஸ்ரீதர், தி.மு.க. தெற்கு ஒன்றியச் செய லாளர் அன்பழகன், அதிமுக தெற்கு  ஒன்றியச் செயலாளர் கோவி.இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவர் கள் ஆர்.செந்தில்குமார், ரமா குமார், ஒப்பந்ததாரர்கள் சத்தியராஜா, ஞான பண்டிதன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

  முன்னதாக வட்டார மருத்துவ அலு வலர் சவுந்தரராஜன் தலைமையில் நட மாடும் மருத்துவக் குழுவினர் சுகா தாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பேரா வூரணியில் உள்ள அனைத்து விழா மண்டபங்களிலும் அன்னதானம் வழங் கப்பட்டது.  

   பேராவூரணி ஜமாலியா பள்ளி வாசலில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது  

   வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி தீர்த்த திருவிழாவும் நடைபெற்றது. சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு திருக் கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும்  நடக்கிறது.

    ஞாயிறன்று (மே 7) விடை யாற்றி உற்சவமும், மண்டலாபி ஷேகமும் நடக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்ப முத்து சங்கரன், கோவில் நிர்வாக அதி காரி ரவிச்சந்திரன் மற்றும் முடப்புளிக் காடு கிராமத்தார்கள், கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.