districts

img

நூறுநாள் வேலை கோரி மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.13 - நூறு நாள் வேலை வழங்கக் கோரி  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. நூறு நாள் வேலையை உடனே  வழங்கி ஏழை, எளிய மக்களை பாது காக்க வேண்டும். மண்ணச்சநல்லூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவிக்க  வேண்டும். பயிர்களை பாதுகாத்திட வும், குடிநீருக்காகவும் பெருவள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். குளம், குட்டை, ஏரி, கடை மடை பாசன வாய்க்கால்களை தூர்வா ரும் பணியை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் செவ்வாயன்று மண்ணச்ச நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூறு நாள் வேலை கேட்டு மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் செல்வம், விவசாயிகள் சங்க ஒன்றியச்  செயலாளர் முருகேசன் ஆகியோர்  தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செய லாளர் சங்கர், தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பூமாலை, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆணைமுத்து, அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு முருகேசன் ஆகியோர் பேசி னர். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணைய ரிடம் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் நல்லையன் நன்றி கூறினார்.